மிரிசவெட்டி தாதுகோபுரம்
இலங்கையில் உள்ள புத்த மத வழிபாட்டுத் தலம்மிரிசவெட்டி தாதுகோபுரம் இலங்கையின் பழங்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேல் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்த பின்னர் மன்னன் துட்டகைமுணு இந்தத் தாதுகோபுரத்தைக் கட்டுவித்தான். இவ்விடத்தில் தாதுகோபுரம் கட்டப்பட்டது குறித்த கதை ஒன்று உண்டு. புத்தரின் சின்னங்களை ஓரிடத்தில் வைத்துவிட்டு துட்டகைமுணு திசவாவியில் குளிப்பதற்குச் சென்றானாம். திரும்பி வந்து எடுக்க முயற்சித்தபோது அதை அசைக்க முடியவில்லையாம். எனவே அவ்விடத்திலேயே தாது கோபுரம் கட்டப்பட்டதாம். 50 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. பிற்காலத்து மன்னர்களான முதலாம் கசியபன், ஐந்தாம் கசியபன் ஆகியோர் இந்தத் தாதுகோபுரம் பழுதடைந்த காலங்களில் திருத்தி அமைத்துள்ளனர். அழிபாடாக இருந்த இதை அண்மையில், கலச்சார முக்கோண நிதியம் திருத்தி அமைத்தது.